தத்துவ மற்றும் விழுமிய கல்வி
நாம் அனைவரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் யார்? வாழ்கை என்றால் என்ன? போன்ற அடிப்படை விடயங்களை எல்லாம் அறிந்து கொள்ளாமலே வாழ்கை ஓடிக்கொண்டிருக்குகின்றது. இயந்திர மயமான இவ்வுலகில் நாமும் ஒரு இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்குகின்றோம். சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. எனவே எமது முக்கியத்துவங்கள் இன்று மாறிவிட்டன. உலகம் பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கை எனும் அம்சத்தில் இருந்து இன்றைய மனிதன் தன்னை பிரித்து எடுத்துவிட்டான். இதனால் தான் கட்டி எழுப்ப நினைக்கும் வாழ்க்கையை தானே அறியாமல் அழித்துக்கொண்டிருக்கின்றான்.
அதுமட்டுமல்லாது தன் முக்கியத்துவங்களை மாற்றிக்கொண்டதனால் தனது வாழ்நாள் முழுவதையும் போட்டி போடுவதற்காகவே செலவிடுகின்றான். எனவே வாழ்க்கையின் விழுமியங்களை மறந்து விட்டான். இந்த நிலைமை சுயநலம் கொண்ட ஒரு ஆரோக்கியமற்ற சமுதாயத்திற்க்கே வழி சமைக்கிறது.
மேற்சொன்ன விடயங்களை நிவர்த்தி செய்யுமுகமாக வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை எடுத்து சொல்லும் பல கருத்தரங்குகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். மக்களை தத்துவ ரீதியாக வாழ்க்கையை அணுக வைப்பதே இதன் நோக்கமாகும். பல காணொளி பதிவுகளும் கலந்துரையாடலும் கொண்டதாக இந்நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. இது வளந்தவர்களை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ள நிகழ்வாகும்.
அதேவேளை இள வயதினருக்கான விழுமிய கல்வி வகுப்புகளையும் முன்னெடுத்து வருகின்றோம். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைக்க தேவையான விழுமிய பண்புகளை இளவயதிலேயே கற்பித்து எதிர்கால சமுதாயத்தை அர்த்தமுள்ள திறம் வாய்ந்த சமுதாயமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.
இந்த நிகழ்வுகளை உங்கள் பிரதேசங்களிலும் மேற்கொள்ள விரும்பின் தயவு செய்து எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.