சிந்தனை பவுண்டேஷன் என்பது பதியப்பட்டு இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். சிந்தனை என்பது மனித வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத அம்சமாகும். நாம் காணுகின்ற, நாம் அனுபவிக்கின்ற இந்த உலகமென்பது மனித சிந்தனையின் வெளிப்பாடேயாகும். மனிதனை மனிதனாக ஆக்குவது அவனது சிந்தனையேயாகும். இதனை மனதிட்கொண்டே சிந்தனைக்கு அடித்தளம் அமைத்து அறிவுப்பூர்வமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு எமது பெயரையும் தீர்மானித்துள்ளோம்.
சமுதாயத்தில் வேறுபட்ட மட்டங்களில் வாழும் மக்களிடையே அறிவை பெற்றுக்கொள்வதில் காணப்படும் ஏற்றத்தாழ்வினை இல்லாதொழித்து அடுத்த சந்ததியினரைச் சிந்தித்துச் செயற்பட வைப்பதே எமது செயற்திட்டமாகும். எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நாம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை இவ்விணையத்தளத்தில் நீங்கள் காண்பீர்களாக…
இலங்கையில் எழில் கொஞ்சும் மத்திய மலையகத்தில் பல தேயிலைத் தோட்டங்களுக்கு நடுநாயகமாகத் திகழும் கொட்டகலை நகரில் அமைந்துள்ள எமது இலவச கல்வி மையத்தில் இடம்பெறும் செயற்பாடுகளையும் அதேபோல் வெளியிடங்களில் நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் இங்கே விவரித்துள்ளோம்.
பதிவு இலக்கங்கள் : இங்கிலாந்து – 1184062, இலங்கை – GA 3459