எம்மைப்பற்றி

சிந்தித்து செயற்படும் அறிவிற்சிறந்த மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு தூரநோக்கின் செயற்பாட்டு வடிவமே சிந்தனை பவுண்டேஷன் ஆகும். இதனை அடைய வேண்டுமானால் அறிவை விருத்தி செய்வதற்கான பொறிமுறைகள் அனைத்தும் சமனாக கிடைக்க வேண்டும். ஆனால் சமுதாயத்தில் பல்வேறுபட்ட மட்டங்களில் வாழும் மக்களிடையே அறிவை பெற்றுக்கொள்வதில் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கும் ஒரு முயற்சியே சிந்தனை பவுண்டேஷனின் செயற்திட்டமாகும்.

மனித வாழ்க்கை என்பது ஒரு தெரிவு எனலாம். ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்க்கையில் மேற்கொள்ளும் தெரிவின் வடிவமே அவரவர் வாழ்க்கை. இந்த தெரிவுகள் அனைத்தும் அவரவர் சிந்தையில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சிறந்த தெரிவினை மேற்கொள்ள வேண்டுமானால் உலகளாவிய அறிவு ஒவ்வொருவரிடத்திலும் பொதிந்து கிடக்க வேண்டும். அப்படியானால் அவ்வறிவினை பெற்றுத்தரும் சாதனங்களும், பொறிமுறைகளும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமல்லவா?

ஆனால் துரதிஷ்டவசமாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இவை சரியாகக் கிடைப்பதில்லை. எனவே உலகில் வசதியான சூழலில் வாழும் ஒருவரின் அறிவு மட்டமும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்பவரின் அறிவு மட்டமும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இவ்விரு சாராரினதும் வாழ்க்கை மட்டத்திலும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. எனவே இந்நிலையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற சமுதாய அக்கறை கொண்ட ஒரு பயணமே சிந்தனை பவுண்டேஷனின் இம்முயற்சியாகும்.

இந்த பயணத்தில் தன்னை ஒரு தொண்டு நிறுவனமாக இங்கிலாந்திலும், இலங்கையிலும் பதிவு செய்து, இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் இளைய சமுதாயத்தினருக்கு அவரவர் வாழ்க்கையைச் சிறப்புற அமைத்துக்கொள்வதற்குத் தேவையான அறிவுசார் விடயங்களை இலவசமாக வழங்கி வருகின்றோம் நாம்.

எமது இந்த முயற்சி வெற்றி பெற்று அறிவுப்பூர்வமான, ஆனந்தமான ஒரு சமுதாயம் அமைவதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எம்மோடு கைகோர்த்து உங்களாலான உதவிகளை நல்கவேண்டுமென தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.